1.5 டன் ரேஷன் அரிசி சிக்கியது ஒருவர் கைது: வாகனம் பறிமுதல்
திருப்பூர்: உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு, காவிலிபாளையம் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் விசாரித்தனர். அதில், மண்ணரையை சேர்ந்த கணேசன், 42 என்பவர், கஞ்சம்பாளையம், கோல்டன் நகர், மேட்டாங்காடு ஆகிய இடத்தில் குறைந்த வி லைக்கு அரிசியை வாங்கி, வடமாநிலத்தினருக்கு விற்றது தெரிந்தது. இதுதொடர்பாக, அவரை கைது செய்து, 1.5 டன் ரேஷன் அரிசி, சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர்.