உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஓரா ஜூவல்லரி வைர நகை கண்காட்சி

ஓரா ஜூவல்லரி வைர நகை கண்காட்சி

திருப்பூர்:திருப்பூர் ஓரா ஜூவல்லரி நிறுவனத்தின் வைர நகை கண்காட்சி மற்றும் விற்பனை, திருப்பூர், அவிநாசி ரோடு, பங்களா ஸ்டாப் எதிரில் உள்ளஆர்.கே.ரெசிடன்சியில் நேற்று துவங்கியது. வாடிக்கையாளர்கள் செல்வராஜ், சுமதி, வக்கீல் ஞானவேல், ராசியப்பன், ஜெகதா, குருநாதன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். நாளை (6ம் தேதி) வரை தினமும் 10:30 முதல் இரவு 8:00 மணி வரை கண்காட்சி நடைபெறும். சிறப்பு சலுகையாக ஒரு வைர நெக்லசுக்கு 9 ஆயிரத்து 999 ரூபாய் மட்டும் முதலில் செலுத்திவிட்டு, மீதித் தொகையை தவணையாக செலுத்தும் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. ஓரா ஜூவல்லரி மேலாளர் பிரபு கூறியதாவது: வைரங்களை செதுக்குவது, நகைகளாக தயாரிப்பது, தங்க நகைகளை வடிவமைப்பது, சில்லறை விற்பனை செய்வது வரை ஓரா ஜூவல்லரி சிறந்த சேவைகளை வழங்குகிறது. நாட்டின் மிகச்சிறந்த மணப்பெண் நகை சில்லறை விற்பனை நிலையங்களில் ஒன்றாக திகழ்கிறது. 160 ஆண்டாக மரபு வழியில் வரும் தங்க நகை கைவினைஞர்களைக் கொண்டு பழைய பராம்பரியமிக்க அற்புத மாக வெட்டப்பட்ட பெல்ஜியம் வைரங்கள், வைர நகைகள், நுட்பமான வடிவமைப்புகள், வண்ணக்கற்களில் விரிவான மணப்பெண் செட் 73 முக காப்புரிமை பெற்ற ஓரா கிரவுன் ஸ்டார் ஆகியன எங்கள் சிறப்பம் சங்கள். கண்காட்சியில் வட்டியில்லாத கடனுதவி மற்றும் வைர மதிப்பில் 25 சதவீதம் வரை அதிரடித்தள்ளுபடி பெறலாம். விபரங்களுக்கு: 93445 09988, 96552 66336.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி