உடல் உறுப்பு தான விழிப்புணர்வு
திருமுருகன்பூண்டி நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் மற்றும் திருமுருகன்பூண்டி ரோட்டரி கிளப் இணைந்து, 'பால் ஹாரீஸ்' ரோட்டரி அரங்கில், நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தின. நுகர்வோர் சங்க தலைவர் காதர் பாஷா, தலைமை வகித்தார்.திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை 'டீன்' முருகேசன், இருப்பிட மருத்துவ அலுவலர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர், உடல் உறுப்பு தானம் குறித்து பேசினர். சங்க ஆயுட்கால உறுப்பினர் சிவகுமார், தன் மனைவியுடன் மருத்துவக் கல்லுாரி சென்று உடல் உறுப்பு தானம் செய்ய ஒப்புதல் அளித்து, சான்று பெற்றுள்ளார். அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.