இயற்கை வேளாண் கண்காட்சி
உடுமலை; வேளாண்துறை சார்பில், அங்கக வேளாண்மை குறித்த மாவட்ட அளவிலான கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் இன்று (20ம் தேதி) காலை, 9:30 மணிக்கு தாராபுரம் ஆனந்த் மகாலில் நடக்கிறது. இதில், இயற்கை வேளாண்மை குறித்து, தொழில்நுட்ப கருத்தரங்கம், வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகள் கலந்துரையாடல், முன்னோடி விவசாயிகளின் வயல்மட்ட அனுபவங்கள் பகிர்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. மேலும் இயற்கை வேளாண்மை, நஞ்சில்லா உணவு உற்பத்தி, இயற்கை முறையில் விளைவித்த விளைபொருட்களை சந்தைப்படுத்துதல், மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் மானிய திட்டங்கள், தொழில்நுட்ப உதவிகள் மற்றும் கண்காட்சி நடைபெறுகிறது.