வெளி மாநில தொழிலாளர் விவரம்: உதவி கமிஷனர் அதிரடி
திருப்பூர்: கடைகள் மற்றும் நிறுவனங்களில், தமிழில் பெயர் பலகை வைத்தல், தொழிலாளருக்கு இருக்கை வசதிஏற்படுத்தி கொடுத்தல், குடிபெயர்ந்த தொழிலாளர் விவரத்தை இணையத-ளத்தில் பதிவேற்றம் செய்தல் போன்ற பணிகள் குறித்த விழிப்பு-ணர்வு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்-தது.தொழிலாளர் துறை உதவி கமிஷனர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். துணை மற்றும் உதவி ஆய்வாளர்கள், முத்திரை ஆய்-வர்கள் மற்றும் உணவு நிறுவன உரிமையாளர்கள், துணிக்கடை உரிமையாளர், வியாபாரிகள் பங்கேற்றனர். தமிழ்மொழியை முன்-னிலைப்படுத்தாமல், பிற மொழிகளை முன்னிலை படுத்திய கடை மற்றும் நிறுவனங்களுக்கு, 2,000 ரூபாய் அபராதம் விதிக்-கப்படுகிறது.உதவி கமிஷனர் ஜெயக்குமார் பேசியதாவது: கடை மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகை, தமிழ்மொழியை முன்னிலைப்ப-டுத்தி இருக்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும், இருக்கை வசதி செய்து கொடுக்க வேண்டும். பத்து மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் பணிபுரியும் கடைகள் மற்றும் நிறுவ-னங்கள், ஆறு மாதத்துக்குள், இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதாவது, https://labour.tn.gov.inஎன்ற இணையதளத்தில், 'படிவம் Y'ல் விண்ணப்பித்து, பதிவு சான்-றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும். பிற மாநிலங்களில் இருந்து குடிபெயர்ந்து வந்த தொழிலாளர் விவரத்தையும் பதிவு செய்ய வேண்டும். மேலும், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட வெளிமாநில பணியாளர் பணியாற்றும் நிறுவ-னங்கள், இணையதளத்தில் விண்ணப்பித்து, பதிவுச்சான்றிதழ் பெறவேண்டும். இல்லாவிடில், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்-கப்படும். இவ்வாறு பேசினார்.