உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  பெருக்கெடுத்த கழிவுநீர்: வாகன ஓட்டிகள் சாகசம்

 பெருக்கெடுத்த கழிவுநீர்: வாகன ஓட்டிகள் சாகசம்

திருப்பூர்: திருப்பூர், காலேஜ் ரோடு அணைப்பாளையம் - சூசையாபுரம், ராயபுரத்தை இணைக்கிறது, மரக்கடை ரயில்வே பாலம். நேற்று முன்தினம் மழை பெய்யாத நிலையில், சாக்கடை கால்வாயில் வீசியெறியப்பட்ட குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளால், பாலத்தின் கீழ் உள்ள இரும்புக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு விட்டது. கழிவு நீர் வழிந்தோட வழியின்றி, கால்வாய் நிரம்பி ரோட்டில் மேலெழுந்தது. இருபுறமும் வாகனங்கள் பாலத்தின் கீழ் கடந்து செல்ல வழியில்லாமல் சிற்றோடை போல் தேங்கியது. அதனை பொருட்படுத்தாமல் சில வாகன ஓட்டிகள் கழிவுநீர் 'சாகசம்' செய்து ஒருபுறம் இருந்து மற்றொருபுறம் கடந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை