உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பல்லடம் புறவழிச்சாலை திட்டம்; அண்ணாமலையிடம் முறையீடு

பல்லடம் புறவழிச்சாலை திட்டம்; அண்ணாமலையிடம் முறையீடு

பல்லடம்; பல்லடத்தில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில், காளிவேலம்பட்டி பிரிவு முதல் மாதப்பூர் வரை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு, பல்லடம் வட்டாரப் பகுதி பொதுமக்கள், தொழில்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புதிய புறவழிச்சாலை திட்டத்தால் அதிக பாதிப்புகள் உள்ளதாகவும், கடந்த ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டு, நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட பழைய புறவழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, ஏற்கனவே, திருப்பூர் கலெக்டர், தேசிய நெடுஞ்சாலை ஆணைய கோட்ட பொறியாளர் மற்றும் பல்லடம் எம்.எல்.ஏ., ஆகியோரை சந்தித்து, பொதுமக்கள், கோரிக்கை மனு அளித்துள்ளனர். நேற்று, பா.ஜ., திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில், கோவை சென்ற பல்லடம் தொழில்துறையினர் மற்றும் பொதுமக்கள் பா.ஜ., முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையை சந்தித்து முறையிட்டனர். புதிய புறவழிச்சாலை திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினர். மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் பரிந்துரைப்பதாகவும், அவரை சந்தித்து மனு கொடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தருவதாகவும் அண்ணாமலை உறுதி அளித்ததாக பா.ஜ., நிர்வாகிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை