உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பல்லடம் மூவர் கொலை வழக்கு தொழிலாளரிடம் விசாரணை

பல்லடம் மூவர் கொலை வழக்கு தொழிலாளரிடம் விசாரணை

பல்லடம் : பல்லடம் அடுத்த சேமலைகவுண்டம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி 78; இவரது மனைவி அலமேலு, 75, மகன் செந்தில்குமார், 46 ஆகிய மூவரும் சமீபத்தில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டனர்.இச்சம்பவம் தொடர்பாக, 14 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, பல்லடம் உட்கோட்ட எல்லைக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில், வடமாநில தொழிலாளர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.போர்வை, பொம்மைகள், சேர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்து வரும் வட மாநில தொழிலாளர்களிடம், கைரேகை பெறப்பட்டு, ஆதார் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.பல்லடம் உட்கோட்ட்டத்தின் கீழ் உள்ள பல்லடம், காமநாயக்கன்பாளையம், அவிநாசிபாளையம், மங்கலம் உள்ளிட்ட அனைத்து ஸ்டேஷன்களில் மட்டுமன்றி, சந்தேகப்படும்படியாக உள்ள நபர்களிடம் நேரில் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கொலை நடந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆகியும், குற்றவாளிகள் சிக்காத நிலையில், போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி