உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குருத்தோலை ஊர்வலம்

குருத்தோலை ஊர்வலம்

திருப்பூர் : கிறிஸ்தவர்களின் புனித வார துவக்கத்தை முன்னிட்டு, நேற்று தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது.இயேசு கிறிஸ்து சிலுவையில் உயிர்த்தெழுந்தார். இதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தவக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. இதற்காக 40 நாட்கள் நோன்பு இருந்து, இயேசு கிறிஸ்து உயிர்த் தெழுந்த தினத்தை, ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர்.கிறிஸ்தவர்களின் தவக்காலம், மார்ச் 5ம் தேதி 'சாம்பல் புதன்' அன்று துவங்கி வரும், 20ம் தேதி ஈஸ்டர் வரை கடைபிடிக்கப்படுகிறது. தவக்காலத்தின் கடைசி வாரம், புனித வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. முதல் நாள் குருத்தோலை ஞாயிறை தொடர்ந்து, பெரிய வியாழன், புனித வெள்ளி கடைபிடிக்கப்பட்டு, வரும் ஞாயிறு ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.நேற்று திருப்பூரில்உள்ள புனித கேத்ரீனாள் சர்ச், எஸ்.ஏ.பி., பஸ் ஸ்டாப் அருகே உள்ள, சி.எஸ்.ஐ., சர்ச், குமார் நகர் சி.எஸ்.ஐ., சர்ச் உள்ளிட்ட சர்ச்களில், குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.

அவிநாசி

அவிநாசி புனித தோமையார் சர்ச் சார்பில், புனித தோமையார் பள்ளி மைதானத்தில் தொடங்கிய குருத்தோலை பவனி முத்துச்செட்டிபாளையம், சேவூர் ரோடு வழியாக குருத்தோலை பவனி சர்ச்சை வந்தடைந்தது. கூட்டுப் பாடல், திருப்பலி நடைபெற்றது.கோவை காந்திபுரம் பாத்திமா பள்ளி தாளாளர் அந்தோணி ஏசுராஜ், அவிநாசி புனித தோமையார் தேவாலய பங்கு குரு மரியஜோசப் ஆகியோர் தலைமையில் கூட்டுப்பாடல், திருப்பலி நடந்தது.அவிநாசி, சேவூர் ரோடு, பார்க் வீதியில் உள்ள சி.எஸ்.ஐ. இம்மானுவேல் சர்ச்சில், குருத்தோலை பவனி நடந்தது. ஆயர் தலைவர் பிரதீப் கமல் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஊர்வலமாக சென்றனர். பின், சர்ச்சில் பிரார்த்தனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ