மேலும் செய்திகள்
ஒன்றிய பொறியாளர்கள் புவனகிரியில் போராட்டம்
11-Dec-2024
உடுமலை, ; தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்க, மாவட்ட அளவிலான கூட்டம் உடுமலையில் நடந்தது.தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்க, மாவட்ட மையத்தின் கூட்டம் உடுமலையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், சங்க மாநிலத்தலைவர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். தொடர்ந்து பணியாளர்களின் நலன் காக்கும் வகையிலான கோரிக்கை மனுக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்புதல், ஒன்றிய அளவில் வட்டார கூட்டங்கள் நடத்துவது,ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஊராட்சி அலுவலக வளாகங்களில் பழவகை மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பது, மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில், பொது மருத்துவ முகாம்கள் நடத்துவது குறித்து ஆலோசனை நடந்தது.சங்கத்தின் புதிய மாவட்ட தலைவராக மயில்சாமி, செயலாளராக பாலாஜி, பொருளாளராக செல்வகுமார் உட்பட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில செயற்குழு உறுப்பினர் சுப்ரமணியன் நன்றி தெரிவித்தார்.
11-Dec-2024