உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பயணியர் பாதுகாப்பு மீட்பு படகு வந்தது

பயணியர் பாதுகாப்பு மீட்பு படகு வந்தது

திருப்பூர்; திருப்பூர், ஆண்டி பாளையம் குளத்தில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில், 1.30 கோடி ரூபாயில் படகு இல்லம் அமைக்கப்பட்டு, மாவட்ட சுற்றுலா துறை சார்பில் படகு சவாரி துவங்கப்பட்டது. இங்கு விடுமுறை நாட்களில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.படகு சவாரியில் ஈடுபடும் பயணிகளின் பாதுகாப்புக்கு முழு உத்தரவாதம் அளிக்கும் வகையில், சவாரியின் போது ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் மீட்பு படகு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பது விதி.அதனால், மீட்பு படகு வந்து சேரும் வரை படகு சவாரியை நிறுத்தி வைக்குமாறு, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியதால், தற்காலிகமாக படகு சவாரி நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது மீட்பு படகு வந்து சேர்ந்ததால், மீண்டும் படகு சவாரி துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை