உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அவிநாசி அரசு மருத்துவமனையில் நீண்ட நேரம் காத்திருக்கும் நோயாளிகள்

அவிநாசி அரசு மருத்துவமனையில் நீண்ட நேரம் காத்திருக்கும் நோயாளிகள்

அவிநாசி; அவிநாசி - சேவூர் ரோட்டில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. உள் மற்றும் வெளி நோயாளிகளாக, தினமும், 600க்கும் மேற்பட்டோர் மருத்துவ பயன் பெற்று செல்கின்றனர். இதில், சர்க்கரை பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனைக்காக வரும் நோயாளிகள் காலை, 7:00 மணி முதலே வரிசையில் காத்து நிற்கின்றனர். மருத்துவமனையில், காலை, 8:00 முதல் 10:00 மணி வரையுள்ள ஷிப்டில் ஒரு மருத்துவரும், அதன்பின், 10:00 முதல் 12:00 மணி வரை ஒரு மருத்துவரும் பணியில் இருக்க வேண்டும். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக மருத்துவர்கள் பணியில் இருப்பர். அதே சமயம் விபத்துகள் நடைபெற்று காயமுற்றவர்கள் சிகிச்சைக்காக வரும்போது அவர்களையும் கவனிக்கும் பொறுப்பு, நோயாளிகளை கவனித்துக் கொண்டிருக்கும் மருத்துவருக்கே உள்ளது. புற நோயாளிகள் பிரிவுக்கு, காலை, 8:00 மணி ஷிப்டுக்கு வரவேண்டிய மருத்துவர்கள், அனுமதி சீட்டு வழங்கும் செவிலியர்கள் பல நாட்களில்உரிய நேரத்திற்கு வருவதில்லை என்று நோயாளிகள் குற்றம் சாட்டுகின்றனர். பல மணி நேரம் காத்திருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அவிநாசி அரசு மருத்துவமனைக்கு போர்க்கால அடிப்படையில் கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள்ஆகியோரை பணியில் அமர்த்தி நோயாளிகளுக்கு விரைவாக சிகிச்சை அளிக்க சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ