மேலும் செய்திகள்
மணவாள மாமுனிகள் கோவிலில் திருமஞ்சனம்
03-Sep-2025
உடுமலை; உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள், ஸ்ரீ ரேணுகாதேவி கோவிலில், 'பவித்ரோத்ஸவ' விழா நடந்து வருகிறது. ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம விதிகளின்படி, வைணவ ஆலயங்களில் அவசியமாக செய்ய வேண்டிய நித்திய பூஜைகள்,நைவேத்தியங்கள், வழிபாட்டு முறைகள் உட்பட அனைத்து கைங்கர்யங்கள், தவறுகளால் ஏற்படும் தோஷங்களிலிருந்து நிவர்த்தி கிடைக்க 'பவித்ரோத்ஸவம்' என்ற வைதீகமான உற்சவம் நடத்தப்படுகிறது. அதன் அடிப்படையில், உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள், ஸ்ரீ ரேணுகாதேவி கோவிலில், கடந்த 2ம் தேதி மாலை, 4:00 மணிக்கு 'பவித்ரோத்ஸவ' யாகசாலை பூஜைகள் துவங்கின. நேற்று காலை, 8:00 மணிக்கு உற்சவர் திருமஞ்சனம், சதுஸ்தான அர்ச்சனம் நடந்தது. இன்று காலை, 8:00 மணிக்கு சதுஸ்தான அர்ச்சனம், ேஹாமம், சாற்றுமுறை கோஷ்டி நடக்கிறது. நாளை (5ம் தேதி) யாகசாலை பூஜைகளும், சிறப்பு திருமஞ்சனம், மஹா நிவேதனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
03-Sep-2025