மேலும் செய்திகள்
தாலுகா தலைநகரை கவனிக்குமா போக்குவரத்து துறை
19-Apr-2025
பல்லடம் :வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, பொதுமக்கள் மதிய நேரத்தில் வெளியே வருவதை பெரும்பாலும் தவிர்க்கின்றனர். அரசியல் கட்சிகள், அமைப்புக்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில், நீர் மோர் பந்தல் பரவலாக அமைக்கப்படுவது வழக்கம்.பல்லடம் வட்டாரத்தில், புறநகர் பகுதிகளில் நீர்மோர் பந்தல் பரவலாக அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், மக்கள் நடமாட்டம் மிகுந்த பல்லடம் நகர பகுதியில், நீர் மோர் பந்தல் அமைக்கப்படவில்லை.வெயிலில் வாடி வதங்கி வரும் பொதுமக்கள் நீர்மோர் பந்தலை தேடும் நிலை உள்ளது. எனவே, அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள் நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.
19-Apr-2025