மேலும் செய்திகள்
4.9 லட்சம் விதிமீறல் வழக்கு
22-Jul-2025
உடுமலை; மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில், திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை, 10.73 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இதுதொடர்பாக, திருப்பூர் கலெக்டர் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில், கடந்த 2021 ஆக.,5ல் அவிநாசியில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் துவக்கி வைக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை, 5 லட்சத்து 45 ஆயிரத்து 325 பேருக்கு உயர் ரத்த அழுத்தம், 2 லட்சத்து 2 ஆயிரத்து 304 பேருக்கு குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு 2 லட்சத்து 22 ஆயிரத்து 482 பேருக்கு, 49 ஆயிரத்து 553 பேருக்கு நோய் தடுப்பு சிகிச்சை, 53 ஆயிரத்து 384 பேருக்கு இயன்முறை மருத்துவம் என, மொத்தம் 10 லட்சத்து 73 ஆயிரத்து 48 பேர் பயனடைந்துள்ளனர் என, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவிநாசி தாலுகா, பொங்குபாளையத்தை சேர்ந்த 75 வயது மூதாட்டி மாரத்தாள். 15 ஆண்டுகளாக சர்க்கரை மற்றும் பிரஷரால் பாதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
22-Jul-2025