உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கம்

மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கம்

அவிநாசி; அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் முன், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில், மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்க துவக்க கூட்டம் நடைபெற்றது.மாவட்ட தலைவர் கருப்பன் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் அண்ணாதுரை, சிவக்குமாரன், இணைச் செயலாளர்கள் சின்னசாமி, கருப்பன், மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி முன்னிலை வகித்தனர். மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கத்தின் கோரிக்கை குறித்து கோட்ட செயலாளர் ராமன் பேசினார்.மாவட்ட குழு உறுப்பினர் ஈஸ்வரமூர்த்தி, வட்டக் கிளை தலைவர் சின்ராசு ஆகியோர் பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராணி பேசினார்.கையெழுத்து இயக்கம் முடிந்தவுடன், மார்ச், 26ல் முதல்வரை சந்தித்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் கோரிக்கை சாசனம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. கோட்டப்பொருளாளர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை