உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாத யாத்திரை பக்தர்களுக்கு அடிப்படை வசதி வேண்டும்

பாத யாத்திரை பக்தர்களுக்கு அடிப்படை வசதி வேண்டும்

பல்லடம்:பழநி தைப்பூச விழாவுக்கு செல்லும் பாதயாத்திரை பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.இது குறித்து, பல்லடம் வட்டார சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை, கலெக்டரிடம் அளித்த மனு:ஆண்டுதோறும், பழநி பாதயாத்திரை செல்லும் பக்தர்களில், பெண்கள் அதிக அளவில் செல்கின்றனர். பாத யாத்திரை செல்லும் வழியில், இயற்கை உபாதை கழிக்கவும், ஓய்வெடுக்கவும், பசி மற்றும் தாகம் தீர்க்கவும் போதிய வசதிகள் இல்லை. இதனால், பெண்கள் சிரமப்படுகின்றனர்.பல்லடம் -- தாராபுரம் ரோட்டை அதிகப்படியான பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால், இயற்கை உபாதை கழிக்கவும் சிரமப்பட வேண்டிய அவலம் உள்ளது.பாத யாத்திரை செல்லும் பக்தர்களின் நலன் கருதி, குடிநீர், தற்காலிக கழிப்பிடம் மற்றும் ஓய்விடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ