உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இழுபறியாகும் பஸ் ஸ்டாப் மாற்றி அமைக்கும் திட்டம்

இழுபறியாகும் பஸ் ஸ்டாப் மாற்றி அமைக்கும் திட்டம்

உடுமலை ; உடுமலை தளி ரோட்டில், பஸ் ஸ்டாப் மாற்றும் திட்டம் இழுபறியாகி வருவதால், போக்குவரத்து நெரிசல், விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.உடுமலை தளி ரோட்டில், குட்டைத்திடல், நுாலகம், தாலுகா அலுவலகம். அரசு பள்ளி என அரசு அலுவலகங்கள் அதிகளவு உள்ளன. நுாலகம் முன், ரோட்டில் பஸ் ஸ்டாப் நிழற்கூரை உள்ளது.உடுமலையிலிருந்து மூணாறு, திருமூர்த்திமலை மற்றும் பல்வேறு கிராமங்களுக்குச்செல்லும் பஸ்கள், நின்று செல்வதால், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் நிரந்தரமாக உள்ளது.இதனையடுத்து, பஸ் ஸ்டாப்பை, அரசு பள்ளி மற்றும் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை பகுதியில், மாற்றி அமைக்க, நகராட்சி, போக்குவரத்து துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து போலீசார் பங்கேற்ற, ஆலோசனை கூட்டத்தில் இரு ஆண்டுக்கு முன் முடிவு செய்யப்பட்டது.இருப்பினும், பஸ் ஸ்டாப் மாற்றி அமைக்கப்படாததால், இரு வழித்தடத்திலும் இயக்கப்படும் பஸ்கள் ரோட்டிலேயே நிறுத்த வேண்டியுள்ளதால், பிற வாகனங்கள் நீண்ட துாரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால், போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. எனவே, நுாலகம் முன் உள்ள பஸ் ஸ்டாப்பை, போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்றி அமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை