மேலும் செய்திகள்
ஊராட்சிகளில் மரக்கன்று நடும் பணி தீவிரம்
06-Jun-2025
அவிநாசி; உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ரோட்டரி திருப்பூர் மெட்டல் டவுன், அவிநாசி குளம் காக்கும் அமைப்பு இணைந்து, அவிநாசி, மங்கலம் ரோட்டில் உள்ள தாமரைக்குளக்கரையில் பனை மர நாற்றுகள் நடும் விழா நடைபெற்றது.குளம் காக்கும் அமைப்பு தலைவர் துரை, செயலாளர் பழனிச்சாமி, பொருளாளர் மகேந்திரன், ரோட்டரி மெட்டல் டவுன் சங்க தலைவர் பழனிச்சாமி, செயலாளர் ரவீந்திரன், பரமேஸ்வரன்,மண்டல ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜன், பழனிச்சாமி, ஈரோடு ரோட்டரி சங்க பசுமை ஆர்வலர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நுாற்றுக்கும் மேற்பட்ட பனை மர நாற்றுகள் நடப்பட்டன.''பசுமை தேவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தொடர்ந்து மரக்கன்றுகள், பனை மர நாற்றுகள் நடும் பணி தொடரும்' என குளம் காக்கும் அமைப்பினர் தெரிவித்தனர்.
06-Jun-2025