உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மக்களுக்கு இடையூறாக பிளக்ஸ்; அப்புறப்படுத்த வலியுறுத்தல்

மக்களுக்கு இடையூறாக பிளக்ஸ்; அப்புறப்படுத்த வலியுறுத்தல்

உடுமலை; உடுமலை அருகே, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்களை அப்புறப்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.உடுமலை ஒன்றியம் போடிபட்டி ஊராட்சியில், பஸ் ஸ்டாப் மற்றும் ரோட்டோரங்களில் விளம்பரம் மற்றும் கட்சி பேனர்கள் தற்போது அதிகம் வைக்கப்பட்டுள்ளன.பஸ் ஸ்டாப்களில் பேனர்கள் வைக்கப்படுவதால், பயணியர் நிற்பதற்கு இடமில்லாமல் உள்ளது. மேலும் காற்றடிக்கும் நேரங்களில், பேனர்கள் பலமாக ஆடுவதால் பயணியர் அங்கு காத்திருப்பதற்கு அச்சப்படுகின்றனர்.ரோட்டோரங்களில் பேனர்கள் இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் முறையாக நிறுத்த இடமில்லாமல், ரோட்டை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு பெரிதும் இடையூறு ஏற்படுகிறது.அங்கு பல இடங்களில், மக்களுக்கு இடையூறாக இருக்கும் பேனர்களை அப்புறப்படுத்த, கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை