மேலும் செய்திகள்
பெருந்துறை கொங்குப்பள்ளி தடகள போட்டியில் அபாரம்
22-Aug-2025
திருப்பூர்; விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரியில் நடந்த, தெற்கு குறுமைய விளையாட்டுப் போட்டியில், பிளாட்டோஸ் பள்ளி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றது. இப்பள்ளி மாணவர்கள் பிரேமா, நேத்ரா, ெஷர்லின் ஆகியோர் தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றனர். 14 வயது மாணவர் பிரிவில், சபரிஷ் கிருஷ்ணா, ஆக்கில், பிரியான்சுராஜ், மாணவியர் பிரிவில், சுக்ரிதா, தீக்ஷா லுாபினி, ராஜ் ஸ்ரீ, சர்நிதா ருத்ர சஷ்டிகா, தியா ஸ்ரீ ஆகியோர் பல்வேறு விளையாட்டுகளில் பதக்கம் வென்றனர். பதினேழு வயது மாணவர் பிரிவில் ெஷர்வின், ஜீவானந்தம், கவின் லேகோஷ்வர்மா, சதாசிவம்,; 19 வயது மாணவர் பிரிவில், ஜாய் ரித்திஸ், முகமது ஆதில், லவக்கேஷ், ஜெய்வர்சன்; மாணவியர் பிரிவில் பிரேமா, சிவரஞ்சினி, ஹரிணி, ரித்து ஹாசினி ஆகியோர் பதக்கம் வென்றனர். 19 வயது மாணவியர் பிரிவில், நேத்ரா, ரோமா, லக்ஷனா, திவ்ய தர்ஷினி ஆகியோர் பதக்கம் வென்றனர். பதக்கம் வென்ற மாணவ, மாணவியர் மற்றும் பயிற்சியாளர் சுரேஷ், சந்தோஷ் மற்றும் சரண்யா ஆகியோரை, பள்ளி தாளாளர் ஹரிகிருஷ்ணன், அறங்காவலர் கிறிஸில்டா லோபஸ், பள்ளி முதல்வர் குமாரி ஆகியோர் பாராட்டினர்.
22-Aug-2025