உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கவிதை - கட்டுரை போட்டி; அசத்திய மாணவர்கள்

கவிதை - கட்டுரை போட்டி; அசத்திய மாணவர்கள்

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள், எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரியில் நேற்று நடைபெற்றன. மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தினர். கவிதை போட்டியில், காந்தி நகர் ஏ.வி.பி., டிரஸ்ட் பள்ளி மாணவி யுவஸ்ரீ முதல் பரிசு, கேந்தனுார் அரசு பள்ளி மாணவி சத்யா இரண்டாம் பரிசு, இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி வான்மதி மூன்றாம் பரிசு பெற்றனர். கட்டுரை போட்டியில், தாராபுரம் புனித அலோசியஸ் பள்ளி சுவேதா முதலிடம்; பல்லடம் அரசு பள்ளி மாணவி ரிபா இரண்டாமிடம், தாராபுரம் திருமலைபாளையம் விவேகம் பள்ளி மாணவன் நித்தின் நிகேஷ் மூன்றாமிடம் பிடித்தனர். பேச்சுப்போட்டியில், புனித அலோசியஸ் பள்ளி மாணவி வர்ஷினி முதலிடம், பழனியம்மாள் பெண்கள் பள்ளி மாணவி நாசியா நோமின் இரண்டாமிடம், ஆர்.கே.ஆர்., கிரக்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவி ஷரிஸ்மிதா மூன்றாமிடம் பிடித்தனர். ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய், இரண்டாமிடத்துக்கு 7 ஆயிரம், மூன்றாமிடத்துக்கு 5 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம், 66 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை