உள்ளூர் செய்திகள்

போலீஸ் டைரி

8 கிலோ குட்கா சிக்கியது

திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் வடக்கு போலீசார் சோதனை மேற்கொண்டனர். ரயிலில் இருந்து வெளியேறிய வடமாநிலத்தவர் சிலரின்பேக்கை சோதனை செய்தனர். ஒடிசாவை சேர்ந்த பிரமோத் மாலிக், 40, தீபக் நாயக், 25, பீஹாரை சேர்ந்த பிரதீப் குமார் மஞ்சு, 27 என, மூன்று பேரிடம், எட்டு கிலோ குட்கா பொட்டலம் இருப்பது தெரிந்தது. மூன்று பேரை கைது செய்து குட்காவை பறிமுதல் செய்தனர்.

கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்

புதுக்காடு 'டாஸ்மாக்' மதுக்கடை அருகே நின்றிருந்த வாலிபரிடம் சந்தேகத்தின் பேரில் தெற்கு போலீசார் விசாரணை செய்தனர். அதே பகுதியை சேர்ந்த மனோஜ்குமார், 34 என்பது தெரிந்தது. விற்பனைக்கு வைத்திருந்த 2.2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். ரயில்வே ஸ்டேஷனில் பிளாட் பார்மில் கேட்பாரற்று கிடந்த, 1.3 கிலோ கஞ்சா பொட்டலத்தை மாநகர மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

டூவீலர் திருடியவர் சிக்கினார்

காலேஜ் ரோடு, துவாரகை நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார், 45; பனியன் தொழிலாளி. கடந்த 4ம் தேதி டூவீலரை ரயில்வே ஸ்டேஷன் முன்பு நிறுத்தி விட்டு சென்றார். திரும்பிய போது, டூவீலர் மாயமாகி இருந்தது. திருப்பூர் வடக்கு போலீசார் டூவீலரை திருடிய, பாரப்பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து, 20 என்பவரை கைது செய்து, டூவீலரை மீட்டனர்.

வெவ்வேறு சம்பவங்களில் 4 பேர் தற்கொலை

தென்னம்பாளையம், கரைத்தோட்டத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி, 55; தொழிலாளி. உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். மனமுடைந்து இருந்த அவர் வீட்டில் துாக்குமாட்டி இறந்தார். சென்ட்ரல் போலீசார் விசாரிக்கின்றனர்.l நத்தக்காடையூரை சேர்ந்தவர் தமிழரசன், 24. கல்லுாரி படிப்பு முடித்து விட்டு, கடந்த, இரு மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். வேலைக்கு செல்லுமாறு, அவ்வப்போது பெற்றோர் கூறி வந்தனர். வீட்டில் இருந்த அவர் துாக்குமாட்டி இறந்தார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.l கொடுவாயைச் சேர்ந்தவர் செல்வம், 51. கூலி தொழிலாளி. வீட்டில் யாருமில்லாத போது, துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.l நாச்சிபாளையம் - கணபதி, வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் செல்வகணேஷ், 35. மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் அவரது தாய் கண்டித்துள்ளார். மனமுடைந்த அவர், துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை