வனப்பகுதியில் பாலித்தீன் அகற்றம்
- - நமது நிருபர் -வனத்துறை சார்பில், பாலிதீன் அகற்றும் பணி நடந்தது. வனத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹு உத்தரவில், வனப்பகுதிகளில் பாலிதீன் குப்பை அகற்றும் பணி மற்றும் அதுதொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில், அமராவதி வனச்சரகத்துக்கு உட்பட்ட உடுமலை, சின்னாறு செக்போஸ்ட் சாலையில், உடுமலை வித்யாசாகர் கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவர்கள், 65 பேர் வனத்துறையினருடன் இணைந்து சாலையோரம் கிடந்த பாலிதீன் குப்பையை சேகரித்தனர். தொடர்ந்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.