மேலும் செய்திகள்
கோவை புறநகரில் கோவில் விழாக்கள் கோலாகலம்
10-Apr-2025
சமயபுரம் மாரியம்மன் கோவில் கம்பம் நடும் விழா
19-Apr-2025
திருப்பூர் : திருப்பூர் டவுன் மாரியம்மன் கோவிலில், நேற்று கம்பம் நடப்பட்டது; நாளை பொங்கல் விழா நடக்கிறது.திருப்பூர் நகரப்பகுதியில் உள்ள டவுன் மாரியம்மன் கோவிலில், சித்திரை மாதம் பூச்சாட்டு பொங்கல் விழா நடந்து வருகிறது. கடந்த, 20ம் தேதி மகாமினி பொங்கல் விழா நடந்தது. நேற்று, நொய்யல் கரையில் இருந்து, கம்பம் மற்றும் கும்பம், மேள தாளத்துடன் எடுத்து வரப்பட்டது. சிறப்பு பூஜைகளை தொடர்ந்து, கோவிலில் கம்பம் நடப்பட்டது. இன்று, பட்டத்தரசி அம்மன் அழைத்தல், மாவிளக்கு, செல்லாண்டியம்மன் கோவிலில் இருந்து பூவோடு எடுத்து வரும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன., நாளை காலை, பொங்கல் விழாவும், சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜையும் நடக்கிறது. வரும், 25ம் தேதி மஞ்சள் மகா அபிேஷகமும், அன்னதானமும், சுவாமி திருவீதியுலாவும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை, அறங்காவலர் குழு தலைவர் துரைசாமி தலைமையிலான விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
10-Apr-2025
19-Apr-2025