உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

உடுமலை; விவசாயிகள் மற்றும் ஊரக இளைஞர்கள், இளம்பெண்களுக்கு, பொங்கலுார் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், வரும் 13ம் தேதி முதல், 4 வாரங்களுக்கு இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. 18 முதல் 35 வயது வரை உள்ள, குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். இத்திட்டத்தின்படி முறையாக பயிற்சி வகுப்புகள் வருகை பதிவு செய்யப்பட்டு, அரசு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் பயிற்சிக்கான கட்டணம் ஏதுமில்லை. இதில் கலந்து கொள்ள தகுதி வாய்ந்த, ஆர்வம் உள்ளவர்கள் தமிழ்நாடு அரசின் 'வெற்றி நிச்சயம்' இணையதளம் மூலமாகவோ பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலையத்திலோ, 04255- 296155, 63794 65045 ஆகிய எண்களில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை