மேலும் செய்திகள்
ரஞ்சி கோப்பை: தமிழக அணி பரிதாபம்
28-Oct-2024
உடுமலை; தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில், தமிழக அணியை வெற்றி பெறச்செய்த உடுமலை பயிற்சியாளர்களுக்கு விளையாட்டு வீரர்கள் பாராட்டு தெரிவித்தனர்.இந்திய பள்ளிகள் விளையாட்டுக்குழுமத்தின் சார்பில், பள்ளிகளுக்கு இடையிலான தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி, சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்தது.இப்போட்டியில் மொத்தமாக 28 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள், சி.பி.எஸ்.இ., பள்ளி இரண்டு என, 32 அணிகள் பங்கேற்றன.போட்டியில், 17 வயதுக்குட்பட்டோருக்கான மாணவர்களுக்கான பிரிவில், தமிழக அணியினர் இரண்டாமிடத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.இறுதிப்போட்டியில், தமிழகம் மற்றும் சத்தீஸ்கர் அணிகள் மோதியதில், 37:49 என்ற புள்ளிக்கணக்கில் தமிழக அணி இரண்டாமிடம் பெற்றது.தமிழக அணியின் சார்பில் விளையாடிய மாணவர்களுக்கு, உடுமலையைச்சேர்ந்த பயிற்சியாளர்கள் விஜயபாண்டி, மேலாளர் தேவராஜ் பயிற்சி அளித்தனர். உடுமலை நேதாஜி மைதானத்தில் பயிற்சி வகுப்புகள் நடந்தன.பள்ளிக்கல்வித்துறை, விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் உடுமலை விளையாட்டு வீரர்கள், சங்கங்களின் சார்பில் பயிற்சியாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
28-Oct-2024