உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் தீவிரம்

வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் தீவிரம்

திருப்பூர்,; வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், பரமபத வாசல் கதவுகளை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.மார்கழி மாதம், பெருமாள் கோவில்களில், பகல் பத்து, இரவுப்பத்து உற்சவத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. குறிப்பாக, நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பரமபத வாசல் வழியாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.வரும் 31ம் தேதி முதல் பகல் பத்து உற்சவம் துவங்குகிறது; ஜன., 9ம் தேதி மோகினி அலங்காரமும், 10ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா மற்றும் பரமபத வாசல் திறப்பு விழாவும் நடக்கிறது.திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் அன்று சுவாமி தரிசனம் செய்வர். கோவில் நிர்வாகம் சார்பில், பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக, வடக்கு நோக்கியுள்ள பரமபத வாயில் கதவுகளை புதுப்பிக்கும் பணி துவங்கியுள்ளது.கோவில் நிர்வாகிகள் கூறுகையில், 'பரமபத வாயில் புதுக்கப்பட்டு, விழா பந்தல் அமைக்கவும், கருட வாகனத்தில் எழுந்தருளும் பெருமாள் வீற்றிருந்து அருள்பாலிக்க ஏதுவாக, தனி பந்தல் அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம். விழா ஏற்பாடுகளும் படிப்படியாக துவங்கியுள்ளது. வரும், 10ம் தேதி அதிகாலை, பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியும், 11ம் தேதி கூடாரவல்லி உற்சவமும் நடக்க உள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை