உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தற்காலிக மதிப்பெண் சான்று

தற்காலிக மதிப்பெண் சான்று

தற்காலிக மதிப்பெண் சான்றுபத்தாம் வகுப்பு தேர்வெழுதிய மாணவ, மாணவியருக்கு இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.பத்தாம் வகுப்பு படித்த பள்ளியிலேயே பிளஸ் 1 தொடர்பவருக்கு, சான்றிதழ்அவசியமில்லை. தனித்தேர்வர்கள் https://www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விடைத்தாள் நகல் கேட்டு நாளை (20ம் தேதி) முதல், 24 வரை நான்கு நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம். அனைத்து பாடங்களுக்கும் கட்டணம் தலா, 275 ரூபாய். விடைத்தாள் நகல் பெற்றவர் மட்டுமே மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ