உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரைகுறையாக பணிகள்; பொதுமக்கள் முற்றுகை

அரைகுறையாக பணிகள்; பொதுமக்கள் முற்றுகை

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி, 41வது வார்டு முத்துமாரியம்மன் கோவில் முதல் கிழக்கு பிள்ளையார் கோவில் வீதி உள்ளிட்ட பல வீதிகளில் சாலை பணிகள் துவங்கப்பட்டு, கிடப்பில் போடப்பட்டுள்ளது. ரோடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் அரைகுறையாகவும், அவசரகதியிலும் மேற்கொள்ளப்படுகிறது. அப்பகுதி பொதுமக்கள் திருப்பூர் முருகம்பாளையத்தில் உள்ள மாநகராட்சி, 4ம் மண்டல அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி அதிகாரிகள் பேச்சு நடத்தி, 'உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று உறுதியளித்த பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.பொதுமக்கள் கூறியதாவது:இந்த வார்டுக்கு உட்பட்ட பகுதியில் மழை நீர் வடிகால், சாலை உள்ளிட்ட பல்வேறு பணிகள் துவங்கப்பட்டன. பல பணிகள் முழுமையாக முடியவில்லை. அவசரகதியாக எந்தவித அடிப்படை பணிகளையும் செய்யாமல், அரைகுறையாக செய்து வருகின்றனர். இதன் காரணமாக சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, அனைத்து பணிகளையும் முறையாக செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !