உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  தீபத்துக்கு கலப்பட எண்ணெய் பொதுமக்கள் கடும் அதிருப்தி

 தீபத்துக்கு கலப்பட எண்ணெய் பொதுமக்கள் கடும் அதிருப்தி

பொங்கலுார்: கடைகளில் கலப்பட எண்ணெயை தீப எண்ணெய், விளக்கு ஏற்றும் எண்ணெய் என்று அச்சிட்டு விற்பனை செய்வதற்கு பக்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. கார்த்திகை தீபத்திருநாள். நல்லெண்ணையில் விளக்கேற்றுவது சிறப்பு. இது காலம் காலமாக கடைப்பிடிக்கப்படும் நடைமுறை. பெரும்பாலான கடைகளில் தீப எண்ணெய் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. தீப எண்ணெய் என்று விற்பனை செய்வது பொதுமக்களை கலப்பட எண்ணெய் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதாக உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருக்கோவில் திருத்தொண்டர் அறக்கட்டளை அமைப்பாளர் கொங்கு ராமகிருஷ்ணன் கூறுகையில், ''கடைகளில் நெய் தீபம் என்று விற்பனை செய்யப்படுவது உண்மையான நெய் கிடையாது. அதேபோல தீப எண்ணெயிலும் பல எண்ணெய்களை கலந்து விற்பனை செய்கின்றனர். தீப எண்ணெய், விளக்கு ஏற்றும் எண்ணெய் என்று விற்பனை செய்யக்கூடாது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை