உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நிழற்கூரை திறப்பு விழா பொதுமக்கள் நிம்மதி

நிழற்கூரை திறப்பு விழா பொதுமக்கள் நிம்மதி

திருப்பூர், : வாலிபாளையம் மாகாளியம்மன் கோவில் முன்புறம் அமைக்கப்பட்டுள்ள நிழற்கூரை திறப்பு விழா நடந்தது.திருப்பூர், வாலிபாளையத்தில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. இதன் முன்புறம் வாலிபாளையம் ரோட்டில் உயரமான நிழற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் தனது தொகுதி வளர்ச்சி நிதியில் இதற்கு 23 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார்.அந்நிதியில் இந்த நிழற்கூரை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்தது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. எம்.எல்.ஏ., செல்வராஜ் இதை திறந்து வைத்தார். மாணவர் அணி செயலாளர் திலக்ராஜ், நகர செயலாளர் நாகராஜ், கவுன்சிலர் முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை