உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மழைநீர் சேகரிப்பு ஊர்வலம்

மழைநீர் சேகரிப்பு ஊர்வலம்

பல்லடம் : சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட வதம்பச்சேரி சொக்கன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ராஜன் தலைமை வகித்தார்.வதம்பச்சேரியை அடுத்த நல்லுார்பாளையம் கிராமத்தில் உள்ள வீதிகள் வழியாக சென்ற மாணவர்கள், ஆசிரியர்கள், மழைநீர் சேகரிப்பு, விவசாயத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இது குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திய படியும், கோஷங்கள் எழுப்பியும் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை