| ADDED : மார் 17, 2024 12:03 AM
திருப்பூர்:திருப்பூரை அடுத்த காங்கயம், சென்னிமலை ரோடு நெய்க்காரன்பாளையத்தில் அ.தி.மு.க., நிர்வாகிக்கு சொந்தமான இடத்தில் 'டாஸ்மாக்' மதுக்கடை (3618) செயல்பட்டு வருகிறது. இக்கடையை, காங்கயம் - கரூர் ரோடு நகரப்பகுதியில் வேலுசாமி என்பவர் இடத்தில் மாற்றம் செய்வதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டது.நேற்று முன்தினம் இரவு, பழைய மதுக்கடையில் இருந்து மதுபாட்டில்களை புதிய இடத்துக்கு மாற்றம் செய்தனர். நேற்று மதியம், 12:00 மணிக்கு கடையை திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதையறிந்த பொதுமக்கள், கடை திறக்க கூடாது என, எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த காங்கயம் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் பேச்சு நடத்தினர்.மாவட்ட நிர்வாகத்தில் இருந்து உத்தரவு வரும் வரை கடை திறக்கப்பட மாட்டாது என, உறுதியளித்தனர். பின், அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.