உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தம்பதி வாரிசுகளுக்கு நிவாரண நிதியுதவி

தம்பதி வாரிசுகளுக்கு நிவாரண நிதியுதவி

திருப்பூர்; விபத்தில் பலியான தம்பதியின் வாரிசுகளுக்கு முதல்வர் பொது நிவாரண நிதி வழங்கப்பட்டது.கணியாம்பூண்டியைச் சேர்ந்த வினோத்குமார்- புஷ்பா தம்பதி, கடந்தாண்டு செப்., மாதம் சாலை விபத்தில் உயிரிழந்தனர். தம்பதிக்கு பள்ளியில் பயிலும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டது. அதற்கான காசோலையை கலெக்டர் கிறிஸ்துராஜ், உயிரிழந்த தம்பதியின், வாரிசுகளுக்கு வழங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் குமாரராஜா உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை