பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
திருப்பூர்; திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் விதிமீறல் கடைகள் அகற்றப்பட்டன.காமராஜ் ரோட்டில் மாநகராட்சிக்குச் சொந்தமான மத்திய பஸ் ஸ்டாண்ட் வளாகம் உள்ளது. இதில் ஏராளமான கடைகள் உள்ளன. இக்கடைகளின் முன்புறங்களிலும், பஸ்கள் நிற்கும் பிளாட்பாரத்தின் ஒரு பகுதியிலும் சிலர் ஆக்கிரமிப்பு செய்து சிறிய அளவில் கடைகள் அமைத்துள்ளனர். இதனால், பயணிகள் நிற்க இடமின்றி அவதிப்படும் நிலை தொடர்ந்து காணப்படுகிறது.இது குறித்த புகார்களின் பேரில், நேற்று மாநகராட்சி அதிகாரிகள் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது ஆக்கிரமிப்பு செய்து, அமைக்கப்பட்டிருந்த ஐந்து கரும்பு ஜூஸ் கடைகள் மற்றும் ஒரு டீக்கடையும் அகற்றப்பட்டது. இக்கடையிலிருந்த பொருட்களை மாநகராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்து வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.