மேலும் செய்திகள்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
19-Dec-2024
உடுமலை; உடுமலையில், தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.நெடுஞ்சாலைத்துறை, உடுமலை உட்கோட்டம், 36-வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.உதவி கோட்டப்பொறியாளர் லோகேஸ்வரன், உதவி பொறியாளர் ராமு வேல், சாலை ஆய்வாளர் குருசாமி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.சாலையில் பாதுகாப்புக்கு பத்து என்ற தலைப்பில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்பவர்கள் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும்.சிறிது நேரம் முன்பாக கிளம்பி, சாலையில் மிதவேகத்தில் செல்ல வேண்டும். தேவைப்படும் நேரத்தில் மட்டுமே வாகனத்தில் 'ஹை-பீம்' விளக்கு பயன்படுத்தவும், சாலையில் மித வேகமாக செல்வோர், இடது புறத்தில் பிற வாகனங்களுக்கு ஒதுங்கி வழிவிட வேண்டும்.மது போதையில் வாகனங்கள் இயக்கக்கூடாது. சாலை விதிகளை மதிக்க வேண்டும். ஓடும் பஸ்சில் ஏறவோ, இறங்கவோ கூடாது. ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிட வேண்டும்.எதிரில் உள்ள சாலை தெரியாமல் வாகனங்களை முந்தக்கூடாது போன்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி, சாலைப்பணியாளர்கள் விழிப்புணர்வு கோஷமிட்டபடி, மக்களுக்கு நோட்டீஸ்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
19-Dec-2024