உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அதிக லாபம் ஆசை காட்டி ரூ.59 லட்சம் சுருட்டல்

அதிக லாபம் ஆசை காட்டி ரூ.59 லட்சம் சுருட்டல்

திருப்பூர்: திருப்பூர் காலேஜ் ரோட்டை சேர்ந்தவர், 52 வயது நபர். பனியன் நிறுவனம் நடத்தியதில், நஷ்டம் ஏற்பட்டது. சமீபத்தில், இவரது மொபைல் போனுக்கு பங்கு சந்தையில் குறைந்த முதலீட்டுக்கு, கூடுதல் லாபம் பெறலாம் என்ற விளம்பரம் வந்தது.இதனை நம்பிய அவர், வாட்ஸ் அப், டெலிகிராமில் இணைந்தார். தொடர்ந்து, அந்த குழுவில் அனுப்பிய லிங்கை பதிவிறக்கம் செய்து, கணக்கு துவங்கினார். குறிப்பிட்ட வங்கி கணக்குக்கு பல்வேறு தவணைகளாக, 59 லட்சம் ரூபாயை செலுத்தினார். அதற்கான லாபத்தை எடுக்க முயன்ற போது, கூடுதலாக, 30 லட்சம் ரூபாயை செலுத்துமாறு கூறினர்.ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். மோசடி தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ