மேலும் செய்திகள்
அறை தர மறுத்த விடுதிக்கு ' சீல் ' வைத்த அதிகாரி!
19-Sep-2025
திருப்பூர்:'சைமா' பொதுசெயலாளர் தாமோதரன் அறிக்கை: கடந்த, 16ம் தேதி, சைமா சங்கத்தின், 69 வது மகாசபை கூட்டத்தில், நிர்வாகக்குழு தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. தேர்தல் அதிகாரியாக, வக்கீல் ராமமூர்த்தி நியமிக்கப்பட்டார். அதன்படி, 2025-28 வரையிலான மூன்று ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள், போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். சங்க தலைவராக சண்முகசுந்தரம், துணை தலைவராக பாலச்சந்தர், பொதுசெயலாளராக தாமோதரன், பொருளாளராக சுரேஷ்குமார், இணை செயலாளர்களாக பொன்னுசாமி, தனபால் மற்றும் 21 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகள், 29ம் தேதி மாலை, 6:00 மணிக்கு நடக்கும் விழாவில், பொறுப்பேற்க உள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. தேர்தல் வாயிலாக, 'சைமா' சங்கம், 1956ல் துவங்கப்பட்டது; சங்கத்தின் முதல் தலைவராக ஜனாப் காதர் முதல் தலைவராக பணியாற்றினார். கடந்த, 1968 முதல், 2008 வரை, மோகன்கந்தசாமி தலைவராக பணியாற்றினார். அவருக்கு பிறகு, 2008 முதல் 'கரோனா' சாமிநாதன் பணியாற்றினார். பிறகு, 2009 முதல், 16 ஆண்டுகள், 'வைகிங்' ஈஸ்வரன் தலைவராக சேவையாற்றினார். இந்நிலையில், பனியன் தொழிலின் தாய் சங்கம் என்று அழைக்கப்படும், 'சைமா'வின் 5வது தலைவராக, எஸ்.டி., நிறுவனத்தின் சேர்மன் சண்முகசுந்தரம், 29ம் தேதி பொறுப்பேற்கிறார் என, சங்க உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
19-Sep-2025