மேலும் செய்திகள்
பழனியப்பா பள்ளி மாணவியருக்கு தங்கம்
01-Nov-2025
திருப்பூர்: திருப்பூர் சகோதயா கூட்டமைப்பு பள்ளிகள் சார்பில், சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையே நடந்த பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற கணியாம்பூண்டி தி எஸ்.சி.வி. சென்ட்ரல் சீனியர் செகண்டரி பள்ளி பங்கேற்று பல்வேறு போட்டியில் அசத்தினர். சுப்பையா சீனியர் செகண்டரி பள்ளியில் நடந்த சதுரங்க போட்டியில், 14 வயது உட்பட்டோர் பிரிவில், மாணவர் ரித்திக் முதலிடம் பிடித்தார். யங் இந்தியா பப்ளிக் பள்ளியில் நடந்த சிலம்ப போட்டியில், 16 வயது உட்பட்டோர் பிரிவில், மாணவி ரித்திகா முதலிடம் பெற்றார். கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளியில் நடந்த கேரம் போட்டியில், பத்து வயது இரட்டையர் பிரிவில், கவுரி, ஓம்கிரிஷ் மூன்றாமிடம் பிடித்தனர். தெக்கலுார் ஸ்ரீ சக்தி இன்டர்நேஷனல் பள்ளியில் நடந்த தடகள போட்டி, குண்டு எறிதலில், 16 வயது பிரிவில், செல்வகோகுல், மூன்றாமிடம் பிடித்தார். பல்வேறு போட்டிகளில், பங்கேற்று வென்ற மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் முருகசாமி வாழ்த்தினார். பள்ளி முதல்வர் தாரணி, துணை முதல்வர் தீபா, தலைமை நிர்வாக அதிகாரி தீபா உள்ளிட்டோர் பாராட்டினர்.
01-Nov-2025