உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோடையை குளிர்விக்கும் மண்பானைகள் களைகட்டும் விற்பனை

கோடையை குளிர்விக்கும் மண்பானைகள் களைகட்டும் விற்பனை

உடுமலை : கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உடுமலை சுற்றுப்பகுதியில் மண்பாண்டங்களின் விற்பனையும் களை கட்டியுள்ளது.மார்ச் மாதம் முதல் கோடை வெப்பம் தொடர்ந்து அதிகரித்து, தற்போது காலை நேரத்திலும் மக்கள் வெளியில் செல்ல தயங்கும் வகையில் சுட்டெரிக்கும் நிலையில் பருவநிலை உள்ளது.பருவ நிலை மாற்றம் மற்றும் அதிகமான வெப்பத்திலிருந்து, உடலை பாதுகாத்துக்கொள்வதற்கு, குளிர்ச்சி தரும் பானங்கள், பழங்களை அருந்துவது வழக்கம்.அதோடு, உடலை அதிகம் வெப்பமடைய விடாமல் தடுப்பதும், நோய்த்தொற்று ஏற்படாமல் இருப்பதற்கும், இயற்கையான முறையை விரும்புவதும் தற்போது அதிகரித்துள்ளது.அந்த வகையில் வீடுகளில் குளிர்சாதனங்களில் குடிநீர் வைத்து பருகுவதற்கு மாற்றாக, மண் பானைகளை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.கோடை துவங்கியதும், உடுமலை சுற்றுப்பகுதியில் மண்பாண்டங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது.மண்பாண்டங்களில் குடிநீரை வைத்து குடிப்பதால், இயற்கையான முறையில் குளர்ச்சி பெற முடிகிறது. இதனால் விதவிதமான வடிவங்களில் குடிநீர் வைப்பதற்கு மண் பாண்டங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.குறைந்தபட்சம் 200 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை விலையில் விற்கப்படுகின்றன. சாதாரண பானைகள், குழாய் பதித்தது, ஜக்குகள், டம்ளர்கள், கோப்பைகள், விதவிதமான கப்கள், ஜாடிகள் என பல்வேறு வடிவங்களில் விற்பனை நடக்கிறது.உடுமலை பஸ் ஸ்டாண்ட், சந்தை ரோடு, பழனிரோடு, வெங்கடகிருஷ்ணா ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அவை விற்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை