உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  பள்ளி கூடைப்பந்து, கிரிக்கெட் தமிழக அணி வீரர்கள் தேர்வு

 பள்ளி கூடைப்பந்து, கிரிக்கெட் தமிழக அணி வீரர்கள் தேர்வு

இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு (எஸ்.ஜி.எப்.ஐ) மாநில அணிகளுக்கு இடையேயான போட்டியை ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது. டிச. மாதம் போட்டிகள் நடக்கவுள்ளது; தமிழக கிரிக்கெட் ஜூனியர் அணி (14 வயது பிரிவு), கூடைப்பந்து சீனியர் அணி (16 வயது பிரிவு) தேர்வு, அவிநாசி, பழங்கரை, டீ பப்ளிக் பள்ளியில் சமீபத்தில் நடந்தது. தமிழக அணிக்குத் தேர்வான கூடைப்பந்து வீரர்கள்:ஹரிஹரன், டிராவிட்தரன் (வேலம்மாள் பள்ளி, சென்னை), அரவிந்த், யோகேஷ் (அமெரிக்கன் பள்ளி, மதுரை), திருமலைவாசன் (செயின்ட் மேரீஸ் பள்ளி, சேலம்), ரத்தீஸ் (கமல சுப்ரமணியம் மெட்ரிக பள்ளி், தஞ்சாவூர்), ரமேஷ் (கருப்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி, துாத்துக்குடி), நித்தின் (நாடார் சரஸ்வதி பள்ளி, தேனி), ஜெய்கிரிஷ் (பிரீக்ஸ் மெட்ரிக் பள்ளி, கோவை), கிருத்திக் (சபர்பன் மெட்ரிக், கோவை), முகுந்தன் (என்.எல்.சி., ஆண்கள் பள்ளி, நெய்வேலி), சஞ்சீவ்குமார் (எம்.என்.அப்துல் ரகுமான் மெட்ரிக் பள்ளி, திருநெல்வேலி) தமிழக அணிக்குத் தேர்வான கிரிக்கெட் வீரர்கள்: ஷாஜிர் அகமது (கார்மல் மெட்ரிக் பள்ளி, ஈரோடு), ராகேஷ் (அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,) அஷ்வத், கே. அஷ்வந்த் (கிரேஸ் மெட்ரிக் பள்ளி, மதுரை), கதிரவன், சச்சின், தாமஸ் தங்கமணி, ஸ்ரீகரண், அஸ்கிக்குமார், தர்ரீஸ் (அரசு மேல்நிலைப்பள்ளி, மேற்கு மாம்பலம், ), விக்னேஷ் பிரபு (சாய் வித்யாநிகேதன் மெட்ரிக் பள்ளி, கோவை), ஷகஜித், ஆதிஷ் கிருஷ்ணா (ஆர்.கே.ஸ்ரீ ரங்கம்மாள் மெட்ரிக் பள்ளி, கோவை), சாய்கிேஷார்குமார் (விஷன் மெட்ரிக் பள்ளி, திருவண்ணாமலை), பவித்ரன் (செயின் பி.டி.எஸ்.ஐ., பள்ளி, சென்னை), ஹர்சன் (எஸ்.எம்.பி.எம்., மெட்ரிக் பள்ளி, திண்டுக்கல்). ஆல்ரவுண்டராக ராகேஷ் தமிழக கிரிக்கெட் ஜூனியர் அணிக்கு திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தேர்வான ஒரே வீரர், அவிநாசியை சேர்ந்த ராகேஷ். எட்டாம் வகுப்பு படிக்கிறார். ''பத்து வயதில் இருந்து கிரிக்கெட் விளையாடுகிறேன். பவுலிங், பேட்டிங், பீல்டிங் மூன்றிலும் ஆர்வமாக இருக்க வேண்டும். அப்போது தான் சிறந்த வீரர் ஆக முடியும். லெக் ஸ்பின் பவுலிங் மூலம் தமிழக அணிக்கு தேர்வானேன்; இடது கை பேட்டிங் என் தேர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. தினசரி மேற்கொண்ட பயிற்சி, அணிக்கு தேர்வாக உதவியது,' என்று கூறுகிறார் ராகேஷ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை