உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குறுமைய குழு போட்டிகளில் பள்ளி அணிகள் போட்டாபோட்டி

குறுமைய குழு போட்டிகளில் பள்ளி அணிகள் போட்டாபோட்டி

திருப்பூர், : தெற்கு குறுமைய அனைத்து மாணவியருக்கான பிரிவில், பால் பேட்மின்டன் போட்டி, வித்ய விகாசினி மெட்ரிக்., பள்ளியில் நடந்தது.இதில், 14, 17 மற்றும், 19 வயது பிரிவில், வித்ய விகாசினி பள்ளி அணி வெற்றி பெற்றது. 14 மற்றும், 17 வயது பிரிவில், கருப்பக்கவுண்டம்பாளையம் அரசுப்பள்ளி மற்றும், 19 வயது பிரிவில் பழனியம்மாள் மாநகராட்சி பள்ளி அணிகள் இரண்டாமிடம் பெற்றன.

கால்பந்து

முதலிபாளையம், நிப்ட் டீ கல்லுாரி மைதானத்தில் நடந்த மாணவர் கால்பந்து, 19 வயதுக்குடப்பட்டோர் பிரிவு போட்டியில், முதல் அரையிறுதியில், செயின்ட் ஜோசப் பள்ளி அணி மற்றும் சென்சுரி பள்ளி அணிகள் மோதின. இதில், செயின்ட் ஜோசப் பள்ளி அணி, 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.இரண்டாவது அரையிறுதியில், கதிரவன் பள்ளி அணி மற்றும் பிரன்ட்லைன் பள்ளி அணிகள் மோதின. இதில், 1-0 என்ற கோல் கணக்கில், கதிவரன் பள்ளி அணி வெற்றி பெற்றது. இறுதிப்போட்டியில், கதிரவன் பள்ளி மற்றும் செயின்ட் ஜோசப்பள்ளி அணிகள் மோதின. இதில், 4 -3 என்ற கோல் கணக்கில் கதிரவன் பள்ளி அணி வெற்றி பெற்றது.

கூடைப்பந்து

வடக்கு குறுமைய அளவிலான, மாணவர் பிரிவு, கூடைப்பந்து போட்டி, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதா னத்தில் நடந்தது. இதில், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில், இன்பேன்ட் ஜீசஸ் பள்ளி அணி வென்றது; ஏ.வி.பி., பள்ளி அணி இரண்டாமிடம் பெற்றது. 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில், இன்பேன்ட் ஜீசஸ் பள்ளி அணி, வி.கே., அரசு பள்ளி அணியை வென்றது. 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில், நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி அணி வெற்றி பெற்றது; ஏ.வி.பி., பள்ளி அணி, இரண்டாமிடம் பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை