உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அதிக தேர்ச்சி சதவீதத்தில் பள்ளிகள் பெற்றோர் வரவேற்பு

அதிக தேர்ச்சி சதவீதத்தில் பள்ளிகள் பெற்றோர் வரவேற்பு

உடுமலை : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், உடுமலை சுற்றுப்பகுதி பள்ளிகள், அதிக தேர்ச்சி சதவீதத்துடன் பெற்றோரின் வரவேற்பை பெற்றுள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. உடுமலை சுற்றுப்பகுதியில் 62 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுதினர். 24 பள்ளிகள் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.மற்ற பள்ளிகளில், ஆர்.கே.ஆர். ஞானோதயா மெட்ரிக் பள்ளி, உடுமலை ஆர்.ஜி.மெட்ரிக் பள்ளி, சிவசக்தி காலனி அரசு உயர்நிலைப்பள்ளி, கொங்கல்நகரம் அரசு உயர்நிலைப்பள்ளி, ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள், 98 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.அடுத்ததாக, மடத்துக்குளம் ஜே.எஸ்.ஆர்., மெட்ரிக் பள்ளி, குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி., மெட்ரிக் பள்ளி, உடுமலை ஜி.வி.ஜி., மெட்ரிக், விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் எலையமுத்துார், பூளவாடி, குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளிகள் 97 சதவீதம் பெற்றுள்ளன.குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி,சோழமாதேவி அரசு உயர்நிலைப்பள்ளி, லுார்து மாதா மெட்ரிக் பள்ளிகள் 96 சதவீதமும், மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் வி.வேலுார் அரசு உயர்நிலைப்பள்ளிகள் 95 சதவீதமும் பெற்றுள்ளன.உடுக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி,கடத்துார் அரசு உயர்நிலைப்பள்ளி, உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளிகள் 94 சதவீதமும், அமராவதி நகர் மற்றும் பெரியபட்டி அரசு உயர்நிலைப்பள்ளிகள்,பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியும் 93 சதவீதமும் பெற்றுள்ளன.ஆர்.கே.ஆர் குருவித்யா மேல்நிலைப்பள்ளி, பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி 91 சதவீதமும், ஜல்லிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளும் 90 சதவீதமும், கல்லாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி 88 சதவீதமும், பள்ளபாளையம் ஆதர்ஷ் மெட்ரிக் பள்ளி 87 சதவீதமும் பெற்றுள்ளன.ராமசந்திராபுரம் மற்றும் காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளிகளும் 85 சதவீதம், புங்கமுத்துார் காந்தி கலாநிலையம் மேல்நிலைப்பள்ளி 84,சிருஷ்டி விகாஷ் மெட்ரிக் பள்ளி 83 சதவீதம், பெரியவாளவாடி அரசு மேல்நிலைப்பள்ளி 82 சதவீதம், உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 72 சதவீதம், துங்காவி அரசு உயர்நிலைப்பள்ளி 70 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ