உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிசினஸ் பேசலாம் வாங்கசைமா சங்கத்தில் கருத்தரங்கு

பிசினஸ் பேசலாம் வாங்கசைமா சங்கத்தில் கருத்தரங்கு

திருப்பூர்;பனியன் தொழிலின் தாய் சங்கமான சைமா சங்கம் சார்பில், ஒட்டுமொத்த தொழில்துறையினர் பயன்பெறும் வகையில், 'பிசினஸ் பேசலாம் வாங்க...' என்ற வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி, 'பாதுகாப்பான தொழில் வளர்ச்சிக்கு வழிகாட்டும் சட்ட ஆலோசனைகள்' என்ற தலைப்பில், இன்று கருத்தரங்கு நடக்க உள்ளது.வாடிக்கையாளருக்கு கடன் கொடுக்கும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் மற்றும் பெற வேண்டிய ஆவணங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது. நிலுவை கடன்களையும், வாராக்கடனையும் சட்டப்படி வசூலிக்கும் நடைமுறைகள், உற்பத்தியின் பல்வேறு நிலைகளில், துணி மற்றும் பொருட்களை 'ஜாப் ஒர்க்' பணிக்கு அனுப்பும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விளக்கப்பட உள்ளது. வக்கீல் ராஜசேகர், கருத்தரங்கில் பங்கேற்று, தொழில்துறையினரின் சந்தேகங்ளுக்கு விளக்கம் அளிக்கிறார். பயனுள்ள இந்த கருத்தரங்கில் பங்கேற்று பயன்பெறுமாறு, 'சைமா' சங்க நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை