உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உலக முதியோர் தினத்தில் ஆடிப்பாடிய முதியவர்கள்

உலக முதியோர் தினத்தில் ஆடிப்பாடிய முதியவர்கள்

திருப்பூர்; மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, விழுதுகள் அமைப்பு சார்பில், உலக முதியோர் தின கொண்டாட்டம் மற்றும் முதியோர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் திருப்பூர் 'சீடு' முதியோர் இல்லத்தில் நடந்தது. 'சீடு' இயக்குனர் கலாராணி முன்னிலை வகித்தார். விழுதுகள் அமைப்பு திட்ட மேலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வக்கீல்கள் தமயந்தி, இம்ரான் ஆகியோர் திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இலவச சட்ட உதவி மைய செயல்பாடுகள், முதியோர்களுக்கான சட்ட பாதுகாப்பு ஆகியவை குறித்து பேசினர். 20க்கும் மேற்பட்ட முதியோர் ஆடி பாடி மகிழ்ந்தனர். விழுதுகள் கள ஒருங்கிணைப்பாளர் அசோக் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ