உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / லோக் அதாலத் நிகழ்ச்சியில் ரூ.84 கோடி மதிப்புக்கு சமரசம்

லோக் அதாலத் நிகழ்ச்சியில் ரூ.84 கோடி மதிப்புக்கு சமரசம்

- நமது நிருபர் -திருப்பூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற லோக் அதாலத் என்னும் மக்கள் நீதிமன்ற நிகழ்வில், ஏறத்தாழ, 4 ஆயிரம் வழக்குகளில், 84 கோடி ரூபாய் மதிப்பில் சமரசம் ஏற்படுத்தப்பட்டது. திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நேற்று திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் மற்றும் தாலுகா கோர்ட்களில் லோக்அதாலத் என்னும் மக்கள் நீதிமன்ற நிகழ்வு நடந்தது.சென்னை ஐகோர்ட் நீதிபதியும் திருப்பூர் மாவட்ட நிர்வாக பொறுப்பு நீதிபதியுமான ஜெகதீஷ் சந்திரா தலைமை வகித்து துவக்கி வைத்தார். மாவட்ட நீதிபதி குணசேகரன் முன்னிலை வகித்தார். மக்கள் நீதிமன்றம் மொத்தம், 21 அமர்வுகளாக நடத்தப்பட்டு, 6,053 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அவற்றில் மொத்தம் 3,992 வழக்குகளுக்கு இரு தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் வகையிலான தீர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. அவ்வகையில், 84.03 கோடி ரூபாய் மதிப்பில் சமரசம் ஏற்படுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை