உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சேவூர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

சேவூர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

சேவூர்; கடந்த சில நாட்களுக்கு முன், தமிழகம் முழுவதும் எஸ்.ஐ. நிலையில் உள்ள ஸ்டேஷன்கள் அனைத்தும் இன்ஸ்பெக்டர் பதவி என்ற நிலை யில் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதனடிப்படையில், அனைத்து ஸ்டேஷன்களிலும் இன்ஸ்பெக்டர்கள் பணியமர்த்தப்பட்டனர். அவ்வகையில், அவிநாசி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட சேவூர் போலீஸ் ஸ்டேஷனில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அருண் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு, பொறுப்பேற்றார். அவருக்கு எஸ்.ஐ. மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர். l அவிநாசி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு கோத்தகிரிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு மாற்றாக ஊட்டியில் பணியாற்றிய வனிதா, அவிநாசிக்கு மாற்றப்பட்டு பொறுப்பேற்று கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி