மேலும் செய்திகள்
தெரு நாய் கடித்து 3 ஆடுகள் பலி
08-Apr-2025
காங்கயம், சிவன்மலையைச் சேர்ந்தவர் சுந்தராம்பாள், 60. மலையடிவாரம் பகுதியில், பூக்கடை வைத்துள்ளார்.இவர் வீட்டில் செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார்.இந்த ஆடுகளை மேய்ச்சல் முடிந்து, வழக்கமாக வீட்டு முன்புறம் கட்டி வைத்திருப்பார்.நேற்று முன்தினம் இரவு கட்டி வைத்திருந்த ஆடுகளில், மூன்று குட்டிகள் நேற்று காலை இறந்து கிடந்தது.இரவு நேரம் தெருநாய்கள் அவற்றை கடித்தது தெரிந்தது. இது குறித்து தகவல் அளிக்கப்பட்டு, கால்நடை துறையினர், வருவாய் துறையினர் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
08-Apr-2025