உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காங்., சார்பில் மவுன ஊர்வலம்

காங்., சார்பில் மவுன ஊர்வலம்

அவிநாசி: காஷ்மீரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவிநாசி வட்டார காங்., சார்பில், மவுன ஊர்வலம் நடைபெற்றது.பழைய பஸ் ஸ்டாண்டில் புறப்பட்ட ஊர்வலம், பேரூராட்சி அலுவலகம் முன் உள்ள காந்தி சிலை முன் நிறைவடைந்தது. அதன்பின், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்யப்பட்டது. அவிநாசி வட்டாரத் தலைவர் கொங்கு தங்கமுத்து தலைமை வகித்தார்.சேவூர் வட்டாரத் தலைவர் லட்சுமணசாமி, நகர தலைவர்கள் கோபால்சாமி (அவிநாசி), அசோக் (பூண்டி) உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ